Sunday 3 February 2013

காலமே சார்பு நிலை

காலமே சார்பு நிலை 

உயிர் தனித்தது. உதித்ததும் அது சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறது .
தான் தனித்தது என்று உணரும்போது அச்சம் நீங்குகிறது 
இந்த அச்ச நீக்கமே விடுதலை.முக்தி. மோட்சம்.நிர்வாணம்.
சார்பு நிலைஇருக்கும் போது தரிசனம் சாத்தியமில்லை. சார்ந்திரும்போது நம்மைத் தாங்கி நிற்கும் நிலைகளுக்கு பதில் சொல்லவேண்டும். பொறுப்பாக வேண்டும்.எப்படியோ நாம் ஓரிடத்தில் நிலைத்தாக வேண்டும் என்ற வேட்கை கூட ஒரு சார்பு நிலை தான். நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. என்னவாக, எதை நோக்கி , நம் யாத்திரை, உயிரின் யாத்திரை  தொடர்கிறது என்பதை அறிய சார்பு நிலை இடையூறாகிவிடும்.
உள்ள நிலையே பெரு நிலை.அதைவிட உன்னதமான நிலை ஒன்று இல்லை உயிர் எண்ணினால் அதற்கு ஒரு ஊறும் இல்லை.ஒரே சிக்கல். தேக்கம். இருக்கிற இடத்தில் நின்று அதைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அதுவே முற்றும் முடிந்த முடிவு என்று பிடிவாதம் ஏற்படும்.தத்துவம் மாறக்கூடியது.அதன் அடிப்படை என்பது காலமே.
முடிந்தவரை,நம் சக்திக்குத தற்போது எட்டும் வரை உலகம் தோன்றியதிலிருந்து நேர்ந்து வந்திருக்கிற தத்துவ தரிசனங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கம்